KFC ஸ்டைல் சிக்கன் / க்ரிஸ்பி சிக்கன்
மாலை நேரத்தில் சாப்பிட உகந்தது.
தக்காளி சாஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.
தேவையான பொருள்கள் :
1. 1/2kg எலும்பு நீக்கிய சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்.
2. தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன் + 2 ஸ்பூன்
3. மிளகு தூள் 2 ஸ்பூன் + 2 ஸ்பூன்.
4. தயிர் 3 ஸ்பூன்.
5. மைதா மாவு ஒரு கப்.
6. அரிசி மாவு 1/2 கப்.
7. சோள மாவு 1/2 கப்.
8. உப்பு தேவைக்கு ஏற்ப.
9. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்.
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன் போட்டு கொள்ளவும்.
2. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன் போட்டு கொள்ளவும்.
3. தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன் போட்டு கொள்ளவும்.
4. மிளகு தூள் 2 ஸ்பூன் போட்டு கொள்ளவும்.
5. தயிர் 3 ஸ்பூன் போட்டு கொள்ளவும்.
6. தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
7. 3 மணிநேரம் கலந்து வைத்த சிக்கனை ஊறவைத்து கொள்ளவும்.
8. இன்னோரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு , 1/2 கப் அரிசி மாவு , 1/2 கப் சோள மாவு போட்டு கொள்ளவும்.
9. அதனுடன் தனி மிளகாய் தூள்
2 ஸ்பூன் , 2 ஸ்பூன் மிளகு தூள் , தேவையான உப்பு போட்டு தண்ணீர் ஊற்றாமல் கலந்து கொள்ளவும்.
10. இன்னொரு கின்னத்தில் குளிர்ந்த (ஐஸ் வாட்டர்)நீரை எடுத்து கொள்ளவும்.
11. ஊறிய சிக்கனை கலந்து வைத்த மாவில் நன்றாக பிரட்டி எடுத்து ஐஸ் தண்ணிரில் 2 sec போட்டு திரும்ப கலந்த மாவில் பிரட்டி எடுத்து ஒட்டி இருக்கும் மித மாவுகளை உதிர்த்து விட்டு தட்டில் வைத்து கொள்ளவும்.
12. ஒரு அகல கடாயில் வருக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
13. தட்டில் எடுத்து வைத்த சிக்கனை ஒண்ணு ஒண்ணாக எண்ணெய்யில் போட்டு மொறு மொறு ஆகும் வரை வறுத்து கொள்ளவும்.
இப்போது சுவையான KFC ஸ்டைல் சிக்கன் ரெடி.
வச்சி சாப்பிட சூப்பர்ரா இருக்கும்.
பதிவு : FoodTamils
keywords : KFC Chicken Recipe in Tamil, How to Make KFC Chicken, Crispy Chicken Recipe in Tamil, KFC க்ரிஸ்பி சிக்கன்,
KFC சிக்கன்
No comments:
Post a Comment