Tuesday, October 31, 2023

ருசியான புளி சாதம் செய்வது எப்படி? Puli Satham Recipe in Tamil

புளி சாதம் / 
Puliyodharai / Puli Sadam /
Tamarind Rice


ஒரு முறை செய்து பாருங்கள்.

ருசியான புளி சாதம்
இதனுடன் உருளைக்கிழங்கு வறுவல் , முட்டை வறுவல் , கருணை கிழங்கு வறுவல் , செப்ப கிழங்கு வறுவல் இதில் எதை வைத்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருள்கள் :

1. வடித்து வைத்த சாதம்.

2. காய்ந்த மிளகாய் 5, 
மூன்று அல்லது இரண்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளளவும்

3. கடுகு 1/4 ஸ்பூன்.

4. கடலை பருப்பு 1 ஸ்பூன்

5. நிலக்கடலை ( வேர்க்கடலை தோள் நீக்கியது ) 2 ஸ்பூன்

6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்

7. கருவேப்பிலை சிறிது.

8. புளி (பெரிய நெல்லிக்காய் அளவு) எடுத்து தண்ணீர் ஊற்றி கலந்து புளி கரைசல் எடுத்து கொள்ளவும்.

 செய்முறை : 

1. அடுப்பு பற்ற வைத்து கொள்ளவும்.

2. கடாயை வைத்து 2 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

3. எண்ணெய் சூடானதும்  கடுகு , கடலை பருப்பு , வேர்க்கடலை போட்டு வதக்கி கொள்ளவும்.

4. கழுவி வைத்த கருவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்த காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும்.

5. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கொள்ளவும்.

6. கரைத்து வைத்த புளி கரைசல் ஊற்றி கொதிக்க விடவும்.

7. உப்பு தேவைக்கு ஏற்ப போட்டு கொள்ளவும்.

8. கட்டியமான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

9. வடித்த சாதத்துடன் புளி பேஸ்ட்டை போட்டு கலந்து கொள்ளவும்.

10. உப்பு காரம் பார்த்து பரிமாறவும்.

ருசியான புளி சாதம் தயார்..

பதிவு : FoodTamils


keywords: புளி சாதம் செய்வது எப்படி
how to make puli sadham, Instant Lunch,
Easy Lunch Recipe,


No comments:

Post a Comment