Tuesday, October 31, 2023

சுவையான காளான் கிரேவி /மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி? Mushroom Gravy In Tamil



காளான் கிரேவி / மஷ்ரூம் கிரேவி
Mushroom Gravy


தேவையான பொருள்கள் :

1. வெங்காயம் 3, சிறிது துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

2. தக்காளி 2, சிறிது துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

3. இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

4. மிளகாய் தூள் 2 ஸ்பூன்

5. சீரக தூள் 2 ஸ்பூன்

6. தயிர் 2 ஸ்பூன்

7. கொத்தமல்லி,புதினா இலைகள் ஒரு கைப்பிடி

8. உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை :

1. ஒரு கடாயில் 2 குழிகரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

2. வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கி கொள்ளவும்.

3. இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

4. வெட்டிய தக்காளியை போட்டு தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கி கொள்ளவும். 

5. வெட்டி வைத்த கொத்தமல்லி, புதினா இலையை சேர்த்து கொள்ளவும்.

6. மிளகாய் தூள்,சீரக தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கொள்ளவும்.

7. தயிர் மற்றும் சின்ன கப் அளவு தண்ணீர் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

8. எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் கழுவி வெட்டி வைத்த மஸ்ரூம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

9. மீடியம் சூட்டில் 10நிமிடம் வேக விடவும் பின்பு உப்பு காரம் சரிப்பார்த்து கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து இறக்கி கொள்ளவும்.

ருசியான காளான் கிரேவி / மஸ்ரூம் கிரேவி தயார்.

சாதம் , சப்பாத்தி , இட்லி , தோசை , பூரி இதனுடன் கலந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

பதிவு : FoodTamils




keywords : மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி, காளான் கிரேவி செய்வது எப்படி, How to make mushroom gravy in tamil



 

No comments:

Post a Comment